விடுதியில் இருந்து கேட்ட பெண்களின் அலறல் சத்தம்: தெறித்து ஓடிய இளைஞர்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

ஆண் நண்பருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட மனைவியை, கணவன் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மஞ்சுலதா என்கிற நர்சிங் மாணவி தன்னுடைய வீட்டின் எதிர்ப்பையும் மீறி கடந்த மே மாதம் சைஃப் கான் என்கிற இளைஞரை திருமணம் செய்துள்ளார்.

ஆனால் பெற்றோரின் தொந்தரவால், மஞ்சுலதா சைஃப் கானை விட்டு பிரிந்து நர்சிங் விடுதிக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் மஞ்சுலதாவின் சகோதரி மனிஷா, விடுதிக்கு வந்திருந்துள்ளார். அதேசமயம் சைஃப் கான் மற்றும் அவனுடைய நண்பன் முஸ்தபாவும் விடுதிக்கு வந்துள்ளனர்.

பிரிந்து சென்றது குறித்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சைஃப் கான், திடீரென தோசை கல்லால் மஞ்சுலதாவை அடித்து கொலை செய்துள்ளான். அதனை தடுக்க வந்த மனிஷாவை கத்தியால் குத்தியுள்ளான். இதில் இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த விடுதி பாதுகாப்பாளர், கதவை திறந்துகொண்டு உள்ளிருந்த இருவரையும் பிடிக்க முற்பட்டார். ஆனால் இருவரும் லாவகமாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏற்கனவே மனைவி பிரிந்து சென்றதில் கோபமாக இருந்த சைஃப் கான், வேறு ஒரு ஆணுடன் சேர்ந்து மனைவி டிக் டாக் செய்ததால் மேலும் ஆத்திரமடைந்துள்ளார்.

இதனால் தன்னுடைய நண்பன் முஸ்தபாவிற்கு 7 லட்சம் பணம் தருவதாக கூறி கொலை செய்ய அழைத்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்