படிக்கட்டில் நிலைதடுமாறி விழுந்த பிரதமர் மோடி

Report Print Vijay Amburore in இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நமாமி கங்கா திட்ட கூட்டத்திற்காக சென்றிருந்தபோது படிக்கட்டில் தடுமாறி விழுந்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் சந்திரசேகர் ஆசாத் வேளாண் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்,உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதன்பிறகு பிரதமர் மோடி, கங்கை நதியில் படகில் பயணம் செய்துவிட்டு திரும்பியபோது, படியில் தடுமாறி விழுந்துள்ளார். இதனை பார்த்த மெய்காப்பாளர்கள் உடனடியாக ஓடிச்சென்று பிரதமரை தூக்கிவிட்டனர்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்