குழந்தை ஆபாச பட விவகாரத்தில் கைதான தமிழர்... அடுத்தடுத்து சிக்கவுள்ள 15 பேர் யார்? பகீர் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படம் பகிர்ந்த வழக்கில அல்போன்சா என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 15 பேரை கைது செய்ய தனிப்படை பொலிசார் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது, இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் குழந்தைகளின் ஆபாச படம் அதிகம் பார்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்த்ததாக கூறி, 3000 பேரின் பட்டியல் தயார் மாவட்ட வாரியாக தயார் என தகவல் வெளியாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் முதல் முறையாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவரின் செல்போனில் இருந்து குழந்தைகளின் ஆபாச படங்களை அதிகம் பார்த்ததுடன், அந்த படங்களை சமூக வலைதலங்களில் தனது பாலோயர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

இதைத்தொடர்ந்து தனிப்படை பொலிசார் அவரது பேஸ்புக், வாட்ஸ்அப்பை முடக்கினர்.

இந்நிலையில் கிறிஸ்டோபரின் பேஸ்புக் கணக்கில் பாலோயர்களாக 300 பேர் இருந்துள்ளனர். அவர்களுக்கு கிறிஸ்டோபர் ஆபாச படங்களை அனுப்பி இருப்பதால் அந்த 300 பேரின் முகவரியையும் தனிப்படை பொலிசார் சேகரித்து உள்ளனர்.

இந்த 300 பேரில் திருச்சியில் மட்டும் 100 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர வாட்ஸ்அப்பில் 15 குரூப்புகளுக்கு கிறிஸ்டோபர் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்.

அவர்கள் குறித்தும் ரகசியமாக விசாரணை நடக்கிறது. திருச்சியை சேர்ந்த 100 பேரில் 15 பேர், கிறிஸ்டோபர் அனுப்பிய படங்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்திருப்பதால் அவர்களின் முழு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலானோர் டாக்டர்கள், வக்கீல்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் முதல்கட்டமாக இந்த 15 பேரையும் ஓரிரு நாளில் விசாரிக்க பொலிசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பின் அனைவரும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்