கனடாவில் இருக்கிறேன்... தமிழக இளைஞனை நம்பி கோடிக்கணக்கில் இழந்த நபர்! அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கனடாவில் இருப்பதாக நடித்த பல இளைஞர்களிடம் 2 கோடி ரூபாய்க்கு அதிகமான பணத்தை சுருட்டியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் பெஸ்ட் கன்சல்டென்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்றை பல ஆண்டுகளாக சிவக்குமார் என்பவர் நடத்து வந்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு இவருக்கு கோயமுத்தூரை சேர்ந்த சையது அசாருதின் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். அவர் சிவக்குமாரிடம் தான் கனடா செல்ல வேண்டும், என்று கூற, உடனே அவரை கனடாவிற்கு அனுப்பும் முயற்சியில் சிவக்குமார் இறங்கியுள்ளார்.

ஆனால், அதற்கு காலதாமதம் ஆகியதால், அசாருதின் தனது உறவினரான வழக்கறிஞர் அப்துல்கசாப் மூலம் கனடாவில் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டதாக, சிவக்குமாரிடம் போன் மூலம் தெரிவித்துள்ளார்.

அதன் பின் கனடா தொலைபேசி எண்ணில் இருந்து சிவக்குமாரை தொடர்பு கொண்ட அசாரூதின் பிஎம்டபிள்யூ, வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நிறைய ஆட்கள் தேவைப்படுவதாகவும், அங்கு தனது உறவினரான வழக்கறிஞர் மூலம் ஒர்க்பெர்மிட் வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளார்.

கனடாவிற்கு ஆட்களை அனுப்பினால், அதற்கு ஒரு நபருக்கு கமிஷனாக வேலைக்கு தகுந்த படி 50 ஆயிரம் ரூபாய் முதல், 1லட்சம் ரூபாய் வரை கமிஷன் எடுத்துக்கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதற்காக அசாரூதின், தன்னுடைய பணிகளுக்காக தனது வங்கி கணக்கிற்கு 20 லட்ச ரூபாயை அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய சிவகுமார் வெளிநாடு செல்ல ஆர்வமாக இருந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பேசி, அவர்களிடம் இருந்து 30 லட்ச ரூபாயை வசூல் செய்து அசாருதினுக்கு அனுப்பியுள்ளார்.

அதோடு அவருடைய சகோதரி தாஸ்லிம் வங்கி கணக்கில் 70 லட்ச ரூபாய் என சுமார் 2 கோடி ரூபாய் வரை செலுத்தியதாக கூறப்படுகின்றது.

ஆனால் பணத்தை வாங்கி கொண்ட அசாருதின் ஒருவரை கூட கனடாவிற்கு வேலைக்கு அழைத்து செல்லாமல் இருக்க, சிவக்குமாரிடம் பணத்தை கொடுத்தவர்கள் எல்லாம் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, அவர் தனது சொத்துகளை விற்று சில இளைஞர்களுக்கு பணத்தை கொடுத்துள்ளார். இதையடுத்து அசாருதினை தொடர்பு கொண்டு கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு சிவகுமார் கேட்டுள்ளார்.

அப்போது தான் அசாரூதின் சொன்ன வார்த்தை அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதில், தனக்கு தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும், எனவே பணத்தை திரும்ப கேட்டால் உன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான்.

இதையடுத்து அசாருதினின் பின்னணி குறித்து முழுமையாக விசாரித்த போது, சிவக்குமாருக்கும் மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

கோயமுத்தூரில் இருந்து கொண்டு கனடா நாட்டில் இருப்பது போன்று நடித்து, அசாருதின் கோடிகளை சுருட்டியுள்ளார்.

தான் சுருட்டிய பணத்தில் லம்போகினி, டுக்காட்டி உள்ளிட்ட விலை உயர்ந்த சொகுசு வாகனங்களை அசாருதின் வாங்கியதும் தெரியவந்தது.

இதனையடுத்து புகைப்பட ஆதாரங்களுடன் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவகுமார் புகார் அளித்ததையடுத்து, அசாரூதினை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...