உன்னாவ் சிறுமி துஸ்பிரயோக வழக்கு: தீர்ப்பு வெளியானது இதுவரை அறியாமல் கோமாவில் வழக்கறிஞர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமி துஸ்பிரயோக வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காருக்கு இறக்கும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் கொண்டாட்டத்தில் உள்ளனர் நீதிக்காக போராடியவர்கள்.

ஆனால் இந்த வழக்கில் இறுதிவரை போராடிய வழக்கறிஞர் மஹேந்திர சிங், வழக்கின் தீர்ப்பு வெளியானது அறியாமல் தற்போதும் கோமா நிலையில் சிகிச்சையில் உள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியுடன் நீதிமன்றம் செல்லும் வழியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ள மஹேந்திர சிங் தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

சம்பவத்தன்று சிறுமியின் உறவினர்களுடன் நீதிமன்றம் செல்லும் வழியிலேயே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

அசுர வேகத்தில் வந்த லொறி ஒன்று இவர்களின் கார் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் சாரதியான மஹேந்திர சிங்கின் கால்கள் இரண்டும் உடைந்தது. முகம் சிதைந்தது. சாரதி என்பதால் நேருக்கு நேர் மோதிய லொறியால் அதிக பாதிப்பு இவருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது டெல்லியில் அமைந்துள்ள AIIMS மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

நாடே உற்றுநோக்கிய இந்த வழக்கில் குற்றவாளி செங்காருக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் இழப்பீடும்,

இதுவரையான நீதிமன்ற செலவுகளை குற்றவாளியே ஏற்க வேண்டும் என தீர்ப்பளித்த நீதிமன்றம் அதற்காக 15 லட்சம் ரூபாயும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

மட்டுமின்றி பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்