காதலனை நம்பி வாழைப்பழத்தை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த துயரம்! தமிழகத்தில் பரிதாபம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நாம் இரண்டு பேருமே இறந்துவிடலாம் என்று கூறி காதலியிடம் காதலன் விஷம் கலந்த வாழைப்பழத்தை கொடுத்துவிட்டு, அவர் விஷமில்லாத வாழைப்பழத்தை சாப்பிட்டதால், இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.

கும்பகோணம் நந்தவனம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் அங்கிருக்கும் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரும்

தனியார் மகளிர் சுய உதவிக்குழு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெருமாள் கோவில் கிராமத்தை சேர்ந்த கோபிநாத ஐயப்பன் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

ஐயப்பன் அங்கிருக்கும் பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தபோது, அங்கு +2 படித்த அப்பெண்ணுக்கும் இவருக்கும் காதல் துவங்கியுள்ளது.

இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின், தற்போது அப்பெண் திடீரென ஐயப்பனுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஐயப்பன் விசாரித்தபோது, அப்பெண் வேறொரு இளைஞருடன் நட்பாக பேசி வந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர் அப்பெண்ணிடம் கேட்ட போது, நாங்கள் இருவரும் நட்பாகவே பழகிறோம், நீ சந்தேகப்படாதே என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் ஐயப்பான் வா நான் உன்னை வீட்டிற்கு கொண்டு சென்று விடுகிறேன் என்று இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று,

ரெட்டிப்பாளையம் அருகே உள்ள இருட்டான பகுதியில் வண்டியை நிறுத்தியுள்ளார்.

அங்கு, அவர் தன் காதலியிடம், இனி நாம் சேரவும் வேண்டாம். வாழவும் வேண்டாம். இந்த விஷம் கலந்த வாழைப்பழத்தை உண்டு இருவருமே உயிரை மாய்த்துக்கொள்வோம் என்று கூற, அப்பெண்ணும் அதை நம்பி சாப்பிட்டுள்ளார். ஆனால் ஐப்பனோ விஷம் கலக்காத மாம்பழத்தை சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற அப்பெண், நடந்தவற்றை கூற, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மருத்துவமனையில் மகளின் சடலத்தை கண்ட பெற்றோர் கதறி அழுதனர். இதற்கு காரணமான ஐயப்பனை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்