2020: புத்தாண்டில் அரசியல் பிரபலங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்? 'ரஜினிக்கு அரசியல் அஸ்திவாரம்' - பிரபல ஜோதிடர்

Report Print Abisha in இந்தியா

அரசியல் தலைவர்களின் புத்தாண்டு ராசிபலன் எப்படி இருக்கும் என்று பிரபல ஜோதிடர் கணித்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு.

பிரதமர் நரேந்திரமோடி

சந்திர திசை நடந்து கொண்டிருப்பதால், 2020 வளர்பிறை காலமாக இருக்கும். சில அரிய செயல்களை செய்து இந்திய மக்கள் மனதில் இன்னும் இடம் பிடிப்பார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

சிறப்பான ஜாதகத்தை பெற்றிருந்தாலும், இவரது ரசிப்படி, தற்போது ஏழரை சனி அமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. இது முதல் சுற்று சனியாக செயல்பட்டு, இந்த ஆண்டு மத்திம பலனை தரும்; இன்றும் சில ஆண்டுகளுக்கு லட்சியம் நோக்கி போகின்ற பயணம் மட்டும் தான்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஜோதிட ரீதியாக, ஒரு உச்ச நிலையை அடைந்து விட்டார். அந்த நிலையை, இவர் தக்க வைத்துக் கொள்ளும் ஆண்டாக, 2020 அமையும். இந்த ஆண்டு சரிவு இல்லை; அரசுக்கும் சிக்கல்கள் இருக்காது.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்:

இந்த ஆண்டு, மகனால் புகழ் பெறும் அமைப்பு இருக்கிறது. இவரது புத்திர ஸ்தானம் வலுவடைந்திருப்பதால், இனி இவரது வாரிசின் வாயிலாக, அரசியல் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

திமுக தலைவர் ஸ்டாலின்

மூன்று ஆண்டிற்கு, ஒரு முதன்மையான நல்ல அமைப்பு வந்துள்ளது. வருடாந்திர கிரகங்கள் அனைத்தும், மிக நல்ல பலனை தரும் நிலையில் இருக்கின்றன. இந்த ஆண்டு, ஒரு நல்ல எதிர்காலத்தின் படிக்கட்டாக அமையும் என்றால், அது மிகையில்லை.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்

இந்த ஆண்டு, உடலும், மனமும் நன்றாக இருக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் என்ற நிலையை அடைந்து விட்டார். இவரது ஜாதக அமைப்பின்படி, அதுவே உச்ச பதவியாக இருக்கும்.

பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி:

இந்த ஆண்டு நன்மைகளை தரும் ஆண்டாக அமையும். இவரது தந்தை ராமதாசுக்கு, இந்த ஆண்டுடன், ஏழரை சனி அமைப்பு முழுவதுமாக முடிவடைவதால், மகனை உயர்நிலையில் வைத்து பார்க்கக்கூடிய அமைப்பு உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்:

இவரது ஜாதகம் அரசியல் பற்றற்ற நிலையை கொண்டது. சூரியனை சனி பார்க்கும் அமைப்புள்ள இவருக்கு, அரசியலில் ஒரு அஸ்திவாரத்தை தரும் ஆண்டாக, 2020 இருக்கும்.

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்:

உயர் நிலை யோகங்களை உடைய, நல்ல ஜாதகம். இவரது ராசிக்கு, தற்போது மிக சிறப்பான அமைப்பு இருக்கிறது. 2021ல் ஏற்படப் போகும் சிறப்புகளுக்கு, அடிகோலும் ஆண்டாக, 2020 அமையும். கமல் தவிர்க்க முடியாதவர் என்பதை நிரூபிப்பார்.

- Dina Malar

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்