பூட்டிய காருக்குள் கிடந்த மூன்று சடலங்கள்... உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவன்

Report Print Vijay Amburore in இந்தியா

அதிவேக நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த காருக்குள் இருந்து மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று தனித்து நின்றுகொண்டிருந்துள்ளது.

ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார் அருகாமையில் சென்று பார்த்தபோது உள்ளே சிலர் இறந்துகிடந்திருப்பது தெரியவந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கண்ணாடியை உடைத்து உள்ளிருந்தவர்களை மீட்க முயற்சித்தார். துரதிஷ்டவசமாக உள்ளிருந்த சிறுவனை தவிர மற்ற அனைவரும் இறந்த நிலையில் கிடந்தனர்.

இதனையடுத்து சிறுவனை மீட்ட பொலிஸார், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் அங்கு சோதனை மேற்கொண்டு ஓட்டுனரின் கையில் இருந்த துப்பாக்கி மற்றும் கடித குறிப்பையும் கைப்பற்றினர்.

பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் நீரஜ் அவரது மனைவி நேஹா மற்றும் மகள் தன்யா ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் Shaurya என்பதும் தெரியவந்தது. கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து எஸ்.பி கூறுகையில், டெல்லியில் தங்கியிருந்த நீரஜ் குடும்பத்தினர் புத்தாண்டு தினத்திற்காக இங்கு வந்துள்ளனர்.

அப்போது நீரஜ் தனது குடும்பத்தை சேர்ந்த 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்