இந்தியாவில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் நபர் ஒருவர் குடியேறியுள்ள நிலையில் அது தொடர்பில் பேசியுள்ளார்.
புதுடெல்லியின் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த 2018ல் இறந்து கிடந்தனர். இதில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், வயதான பெண்மணி தரையிலும் சடலமாக கிடந்தனர்.
விசாரணையில் சொர்க்கத்தை அடைய போகிறோம் என்ற மூடநம்பிக்கையில் 11 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
நராயணி தேவி (77), லலித் (45), புவனேஷ் சிங் (50), டினா (42), சவீதா (48), நீத்து (25), மனிகா (23), துருவ் (15), சிவம் (15), ப்ரதீபா (48), பிரியங்கா (33) ஆகியோரே இவ்வாறு இறந்தார்கள்.
இவர்கள் வாழ்ந்த வீட்டில் குடியேற பலரும் அச்சம் தெரிவித்தனர்.
இந்நிலையில் மோகன் சிங் கஷ்யப் என்ற மருத்துவர் Dhruv Diagnostic laboratory என்ற மருத்துவ ஆய்வகத்தை அந்த வீட்டில் தொடங்கியுள்ளார்.
அங்கு மோகன் குடியேறி மூன்று நாட்கள் ஆகியுள்ளது. இது குறித்து மோகன் கூறுகையில், இங்கு குடியேறுவதற்கு முன்னர் சில மத ரீதியான பூஜைகள் செய்தோம்.
என் குடும்பத்தினர் மற்றும் 7 ஆய்வக ஊழியர்களுடன் இங்கு நாங்கள் உள்ளோம்.
கடந்த மூன்று நாட்களில் இங்கு எந்தவொரு அசாதாரணமான விடயங்களையும் நான் உணரவில்லை.
நாங்கள் எதை பற்றியும் யோசிக்காமல் வேலை செய்து வருகிறோம், மக்கள் எங்கள் ஆய்வகத்துக்கு குறைந்தளவே வர தொடங்கியுள்ளனர், ஆனால் வரும் நாட்களில் அது அதிகரிக்கும் என கூறியுள்ளார்.