தமிழக- கேரள எல்லையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்ட தீவிரவாதிகள்! முழு தகவல்

Report Print Abisha in இந்தியா

தமிழகத்தில், சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்த தீவிரவாதிகளை கைது செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழக கேரள எல்லையில், சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் என்பவரை 8ஆம் திகதி இரவு 9:45மணிக்கு சாலையில் நடந்து வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர்.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம், அதிகாரிகளை கொந்தளிக்க செய்துள்ளது.

நேற்று மாலை வில்சனின் உடல் 21 குண்டுகள் முழங்க அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடங்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், குற்றவாளிகள் இவர்கள்தான் என்று காவல்துறை இருவரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். மேலும், இருவரு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகப்படும் நபர்கள்( தீவிரவாதிகள்)

அதன்பின், தமிழக டி.ஜி.பி திருபாதி, வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட படந்தாலுமூடு சோதனை சாவடியை ஆய்வு செய்தார்.

உதவி ஆய்வாளர் வில்சன்

பின், கேரள டிஜிபிஐ சந்தித்த திருபாதி, தமிழக கேரள எல்லை பகுதியில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து பேசினர்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டமன்றத்தில், எஸ்.ஐ.வில்சனை சுட்டுக்கொன்றவர்களை உடனே கைது செய்ய தென்மண்டல ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில், இதுபோன்ற செயல் தீவிரவாதிகள் ஊடுருவலை அதிகரித்துள்ளதா? என்ற சந்தேகங்கள் எழுப்புவதாக அரசியல், ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்