தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியை தீர்த்த விதவை பெண்! அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் வறுமையின் காரணமாக தலைமுடியை எடைக்கு விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து குழந்தைகளின் பசியை போக்கியுள்ளது கண்கலங்க வைக்கிறது.

சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர் செல்வம். இவர் வீரமனூரில் இருக்கும் செங்கல் சூளையில் வேலை பார்த்துவந்துள்ளார்.

சூளை முதலாளியிடம் வாங்கிய கடனை அடைக்க செல்வம் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். 5 லட்சத்திற்கு மேல் கடன் சுமை இருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன் செல்வம் தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் இவரின் மனைவியான பிரேமா, மூன்று குழந்தைகளுடன் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அதன் பின் வேறு வழியின்றி, செல்வம் வேலை பார்த்த செங்கல் சூளையிலேயே வேலைக்கு சேர்ந்தார்.

அங்கும், கடன்காரார்கள் அவரை தொந்தரவு செய்து வந்ததால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

வேலைக்கு போகாததால் கையில் பணமும் இல்லாதால், குழந்தைகள் பசியில் வாடியுள்ளனர். குழந்தைகளின் பசியை போக்க வேறு வழிதெரியாமல், தன் தலைமுடியை விற்று அதில் கிடைத்த 150 ரூபாய் பணத்தை வைத்து குழந்தைகளின் பசியை நீக்கியுள்ளார்.

இது குறித்த தகவல் அறிந்த சமூக ஆர்வலர் பாலா என்பவர், பிரேமாவின் நிலையை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். வலைத்தள நண்பர்கள் மூலம் ஒரு லட்சம் கிடைத்துள்ளது. மேலும், பாலா மற்றும் அவரது நண்பர்களும் சேர்ந்து கொடுத்த பணத்தைக்கொண்டு கடனை பிரேமா கடனை அடைத்துள்ளார்.

பிரேமாவுக்கு தற்போது மாவட்ட நிர்வாகமும், மாதாந்திர உதவித்தொகை வழங்கி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...