துணிச்சலுக்கான ஜனாதிபதி விருது பெற்ற பொலிஸ் அதிகாரி: தீவிரவாதிகளுடன் கைது!

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவில் துணிச்சலுக்கான ஜனாதிபதி விருது பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீர் மாநிலம் எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் பொலிசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், குல்காம் மாவட்டம் மிர்பஜார் அருகே நெடுஞ்சாலையில் ராணுத்தினர் கடும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 பேர் இருந்துள்ளனர்.

அதில் ஒருவர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் அதிகாரி தேவிந்தர் சிங்.

அவர் துணிச்சலுக்கான ஜனாதிபதி பதக்கத்தை அணிந்திருந்தார். விசாரணையில் அவருடன் இருந்தது பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

அவர்களுடன் குறித்த அதிகாரிக்கு தொடர்பு இருந்துள்ளது. தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான சையத் நவீதுபாபு, ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த ஆசிப் ரத்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் கை எறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 தீவிரவாதிகளும் சோபியான் மாவட்டத்தில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வெளியே தப்பிச்செல்ல அதிகாரி தேவிந்தர் சிங் உதவி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் தீவிர வீசாரணை நடத்த ரகசிய இடத்துக்கு ராணுவத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் தேவிந்தர் சிங்கின் ஸ்ரீநகர் வீட்டில் பொலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஒரு ஏ.கே.47 துப்பாக்கி, 2 பிஸ்டல் துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...