நடிகை ரஞ்சிதா வீடியோ மட்டுமா? நித்தியானந்தாவின் செல்போனி இருக்கும் வீடியோக்கள்: வெளிவராத தகவல்

Report Print Santhan in இந்தியா
805Shares

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ மூலம் பிரபலமான நித்தியானந்தா, அதன் பின் அடுத்தடுத்து பல பிரச்சனைகளில் சிக்கிய நிலையில், அவரைப் பற்றி வெளிவராத சில தகவல்களை ஜனார்த்தன சர்மா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா மீது பாலியல் பலாத்காரம், கடத்தல் என பல பிரிவுகளின் கீழ் வழக்கு இருக்கிறது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்க, நித்தியானந்தா திடீரென்று இந்தியாவை விட்டே தப்பி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார்.

இப்போது அவர் இருக்கும் இடம் இது தான் என்று எந்த ஒரு உறுதியான தகவலும் இல்லை. ஆனால் அவரிடம் என்னுடைய மகள்கள் சிக்கி தவிப்பதாகவும், நித்தியானந்தா அவர்களை கடத்தி சென்று மிரட்டி வைத்துள்ளதாக நித்தியானதாவுடன் பல ஆண்டுகள் ஒன்றாக இருந்த ஜனார்த்தன சர்மா கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஆனால் அவர் மகள்களோ நாங்கள் நன்றாகவே இருக்கிறோம் என்று வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் எப்போது எங்களுக்கு ஆபத்து வரும் என்று தெரியவில்லை, அது போன்ற சூழ்நிலையில் இப்போது மாட்டிக் கொண்டோம் என்று வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோவைக் கண்ட ஜனார்த்தன சர்மா உடைந்து போனார்.

அந்த வீடியோ நள்ளிரவில் வெளியானது, அதை பார்த்து இரவு முழுவதும் அழுதேன், இதையடுத்து உடனடியாக அந்த வீடியோவை குஜராத் மாநில உயர்நீதிமன்றத்திற்கு மறுநாள் காலை சென்றேன்.

அந்த வீடியோவையும் அதில் எனது மகள் உயிர் பயத்துடன் கதறியதையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தேன். அந்த நீதிமன்ற உத்தரவுப்படி எனது மகளை தேடி வரும் குஜராத் மாநில பொலிசாரிடம் சென்று வீடியோவை காண்பித்தேன், இதைக் கண்டு அதிர்ந்து போன அவர்கள் உடனடியாக என்ன செய்ய முடியும் என்று ஆலோசித்தார்கள்.

ஜனார்த்தன சர்மா

சில நாட்களுக்கு முன்புதான் என்னிடம் வாக்குமூலம் வாங்கினார்கள். அதில், நான் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் இணைந்து காட்சி தந்த வீடியோவை தாண்டி பல விஷயங்கள் ஆசிரமத்தில் நடக்கின்றன.

குருகுலப் பள்ளி என நித்தியானந்தா நடத்தும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் காமக் களியாட்டத்தில் ஈடுபடும் அளவிற்கு நித்தியனந்தா மனநோய் முற்றிய ஒரு கிரிமினல் என ஆதாரத்துடன் விளக்கினேன். அவர் எந்த மோசமான நடவடிக்கையும் செய்வார்.

பல கொலைகளை செய்தவர் என்றேன். அடுத்த நாளே இந்த வீடியோ வெளியானது. இந்த வீடியோ உண்மையான வீடியோ. அதில் பேசிய என் மகளின் பேச்சு உண்மையானது. ஒரு தகப்பனான எனக்கு எனது மகளின் முக பாவங்கள் நன்றாக தெரியும்.

என் மகள் அச்சத்தில் பேசிய வீடியோவுக்கு பின், மற்றொரு வீடியோ ஒன்று அவளுடைய பேஸ் புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், உயிருக்கு ஆபத்து' என அவள் பேசி வெளிவந்த வீடியோ முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் பேசிய வீடியோ என்று மகள்கள் கூறுகிறார்கள்.

இதனால் உயிருக்கு ஆபத்து என்று கூறிய வீடியோவை நினைத்து பயப்படுவதா? இல்லை அதற்கு பின் அவள் வெளியிட்ட வீடியோவில் அது ஒரு சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என நினைத்து நிம்மதி பெருமூச்சு விடுவதா என்றே தெரியவில்லை குழப்பத்தில் உள்ளேன்.

நித்தியாந்தனாவின் காம லீலைகள் எல்லாம் அவர் உபயோகித்த செல் போன்களில் இருக்கின்றன. அதை அழிப்பதற்கே சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் நித்தியானந்தா செலவு செய்திருக்கிறார்.

அவர் ஒரு மோசமான கிரிமினல். அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் இறங்குவார், அவருக்கு எதிரான போராட்டத்தை எனது குழந்தைகளை காப்பாற்றத் நான் துவங்கினேன், அது இன்று அது நித்தியானந்தாவின் சாம்ராஜ்யத்தையே நிலைகுலைய செய்யும் போராட்டமாக மாறிவிட்டது.

இதற்கு காரணமான என் குழந்தைகளை அழிக்க நித்தியானந்தா கண்டிப்பாக இறங்குவார், அப்படி ஒரு முயற்சி நடந்தபோது எனது மகள் உயிருக்கு ஆபத்து என பேசி வீடியோ வெளியிட்டார். அது வைரலானது. இந்தியா முழுவதும் ஊடகங்கள் அதை வெளியிட்டன.

அதை நான் எனது மகள் காணாமல் போன புகாரை விசாரிக்கும் நீதிமன்றத்திலும் சமர்ப்பித்ததால் எனது மகள்களை விட்டே மறுப்பு வெளியிட்டுள்ளார் நித்தியானந்தா. நித்தியானந்தா இதுபோல நிறைய கிரிமினல் வேலைகளை செய்கின்றவர். உண்மையில் எனது மகள்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் பெரிய ஆபத்து உள்ளது என்று வேதனையுடன் நக்கீரன் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்