ஹொட்டல் அறையில் மனைவி, மகன்களை கழுத்தறுத்து கொன்ற நகைக்கடை உரிமையாளர்! எழுதி வைத்திருந்த கடிதம்

Report Print Raju Raju in இந்தியா
513Shares

தமிழகத்தில் குடும்பத்துடன் ஹொட்டலில் தங்கியிருந்த நபர் தனது மனைவி மற்றும் இரு மகன்களை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரின் ஊரணிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், (47). இவரது மனைவி செல்லம் (43). தம்பதிக்கு நிகில் (20) முகில் (14) என இரு மகன்கள் இருந்தனர்.

இதில் நிகில் மனவளர்ச்சி குன்றியவர். ஊரணிபுரத்தில் நிகில் தங்கமாளிகை என்ற பெயரில் செல்வராஜ் நகைக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் திருச்சி வந்த செல்வராஜ் ஹொட்டலில் தங்கியுள்ளார்.

பின்னர் ஊரில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்து, தன்னை ஹொட்டலில் வந்து சந்திக்கும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த உறவினர் நேற்று இரவு, 10.30 மணியளவில் ஹொட்டலில் வந்து பார்த்தபோது, நிகில், முகில், செல்லம் ஆகிய மூவரும் கழுத்தறுபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.

செல்வராஜ் கழுத்தறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் செல்வராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஹொட்டல் அறையில் செல்வராஜ் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது.

அதில், மகன் நிகில் மனவளர்ச்சி குன்றி ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை தாங்க முடியாமல், மூவரையும் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியுள்ளார்.

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்