எனக்கு திருமணமே நடக்காதா? புலம்பியபடியே இருந்த 40 வயது நபர் எடுத்த முடிவு

Report Print Raju Raju in இந்தியா
285Shares

தமிழகத்தில் திருமணமாகாத விரக்தியில் 40 வயது நபர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே உள்ள வானாதிராஜபுரத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன் (75). இவரது மகன் (40). எலக்ட்ரீசியனான இவர் மது பழக்கத்துக்கு அடிமையானர் எனக் கூறப்படுகிறது.

தினமும் சம்பாதிக்கும் பணத்தை குடித்துவிட்டு வருவதை சேதுராமன் வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவார் என திருமண ஏற்பாடுகளை வைத்தியநாதன் செய்துள்ளார்.

ஆனால் சேதுராமன் குடி பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதை தெரிந்துகொண்டு, யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த சேதுராமன், 40 வயதான எனக்கு திருமணமே நடக்காதா, நான் மட்டுமா குடிக்கிறேன்,ஊரே குடிக்கிறது என புலம்பியபடியே இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 10ம் திகதி மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு பெருமாள் கோயில் வாசலில் மயங்கி கிடந்துள்ளார்.

அவரை மீட்ட உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சேதுராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்