நிர்பயா குற்றவாளிகள் போல பொம்மைகளை தயார் செய்து தூக்கு தண்டனை ஒத்திக்கை! தண்டனை உறுதி

Report Print Raju Raju in இந்தியா

நிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்ற இருவரின் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ள நிலையில் 4 குற்றவாளிகளையும் தூக்கில் போட திகார் சிறையில் பொம்மையை வைத்து ஒத்திகை நடத்தப்பட்டது.

டெல்லியில், கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில், மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி அதே ஆண்டு டிசம்பர் 29-ஆம் திகதி உயிரிழந்தார்.

இது தொடர்பாக அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், 4 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இந்நிலையில், குற்றவாளிகள் வினய் சர்மா மற்றும் முகேஷ் ஆகிய இருவரும், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு முன்பு, இன்று பிற்பகல் 1.45 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இருவரின் சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதன் மூலம் நிர்பயா வழக்கில் வரும் 22ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்த சூழலில் 4 குற்றவாளிகளையும் தூக்கில் போட திகார் சிறையில் ஒத்திகை நடைபெற்றது.

4 பேரின் எடையை அதிகாரிகள் பதிவு செய்து, அதே எடையில் பொம்மைகளை தயார் செய்திருந்தனர். கற்கள் மற்றும் கட்டிட கழிவுகள் நிரப்பப்பட்ட சாக்குகளை கொண்டு இந்த பொம்மைகள் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers