பாலத்தின் உச்சியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்: ஹீரோவாக மாறிய பொலிஸ்

Report Print Vijay Amburore in இந்தியா

பாலத்தின் உச்சியில் நின்றுகொண்டு தற்கொலை செய்துகொள்ள தயாரான இளம்பெண்ணை பொலிஸார் ஒருவர் காப்பாற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மும்பையை சேர்ந்த பாத்திமா ஷேக் என அடையாளம் காணப்பட்ட பெண் ஒருவர், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் வாஷி பாலத்தில் நின்றுகொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் திரளாக குவிந்து அந்த பெண்ணுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட ஆரம்பித்தனர் .

ஆனால் அந்த பெண் விடாப்பிடியாக அங்கிருந்த அனைவரையும் மிரட்டிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென போக்குவரத்து பொலிஸார் துணிந்து செயல்பட்டு, பாத்திமாவை காப்பாற்றினார்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் விரைந்து செயல்பட்ட பொலிஸாருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்