23 தடவை சிறை விதிகளை மீறிய நிர்பயா குற்றவாளிகள்... படிப்பையும் முடிக்காமல் தூக்கிற்கு செல்கின்றனர்

Report Print Abisha in இந்தியா

நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 23 தடவை விதிகளை மீறியதாகவும், சிறையில் இருந்து 1,37,000 ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிர்பயா பாலியல் வன் கொடுமை 2012ஆம் ஆண்டு நடந்தது. நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தில் தற்போது நான்கு குற்றவாளிகள் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் சிறையில் உள்ளனர்.

அவர்கள், நான்கு பேருக்கும் வரும் 22ஆம் திகதி காலை, 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். 4 கைதிகளை சேர்ந்து தூக்கிலிடுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

தூக்கிலிடும், நபருக்கு ஒரு தூக்குக்கு 15,000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.

இந்த நான்கு குற்றவாளிகளும் 7ஆண்டு சிறை வாசத்தில், சில சிறை விதிகளை மீறியுள்ளனர். அதில், வினய் 11 முறையும், அக்ஷை ஒருமுறையும், பவன் 8 முறையும் சிறை விதிகளை மீறி தண்டனை பெற்றுள்ளனர்.

மேலும், முகேஷ் எந்த சிறை வேலைகளிலும் ஈடுபடவில்லை. அக்ஷை 69, 000 ரூபாய் சம்பாதித்துள்ளான். பவன், 29,000 ரூபாய் சம்பாதித்துள்ளான். வினய் 39,000 சம்பாதித்துள்ளான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2016ஆம் ஆண்டு முகேஷ், பவன், அக்ஷை 10 ஆம் வகுப்பிற்கான தேர்வு எழுதி வெற்றி பெறவில்லை. வினய் 2015ஆம் ஆண்டில் கல்லூரி படிப்பை துவங்கியுள்ளான். அவனும் அதை முடிக்கவில்லை.

இந்த நான்கு குற்றவாளிகளின் பெற்றோருக்கும், தூக்கிலிடும் முன் இரண்டு முறை பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் நான்கு பேரும், தற்போது வரை சிசிடிவி மூலம் தினமும் கண்காணிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்