வீர தீர செயலுக்காக விருது பெற்ற பொலிஸ் அதிகாரி; பணத்தாசையால் சொந்த நாட்டை அளிக்க முயன்ற செயல்

Report Print Abisha in இந்தியா

புல்வாமா தாக்குதலின் போது, அப்பகுதியில் டி.எஸ்.பியாக இருந்த தாவீந்தர் சிங் தீவிரவாதிகளுடன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தாக்குதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது வழங்கறிஞர் சுஷில் குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதினான்.

அதில் “நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதியை ஜம்மு காஷ்மீர் சிறப்பு படை பிரிவு பொலிஸ் அதிகாரி தாவீந்தர் சிங் டெல்லி அழைத்து செல்லுமாறு கேட்டு கொண்டார். நான் அந்த தீவிரவாதியான முகமதுவுக்கு வீடு வாடகைக்கு பிடித்து கொடுத்து கார் ஒன்றும் வாங்கி தந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளான்.

அப்சல் குருவின் அந்த கடித்ததில் இருந்த முக்கிய தகவல்கள் குறித்து வழங்கறிஞர் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதை உதாசீன படுத்தியது.

அப்சல் குரு

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை ஜம்மு காஷ்மீர் பொலிஸ்க்கு ரகசிய அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், ஜம்மு - ஸ்ரீநகர் சாலையில் தீவிரவாதிகள் காரில் சென்று கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அந்த காரை, பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர். காரில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தின் கமாண்டர் சையத் நவீத் முஸ்தாக் மற்றோரு தீவிரவாதி ரஃபீ ராதர் ஆகியோர் இருந்தனர்.

அவர்களுடன் மற்றொரு முகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் அவர் தாவீந்தர் சிங் என்பதை உறுதி செய்தனர்.

அதில், பிடிப்பட்ட திவிரவாதிகள் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரியவந்த நிலையில், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்பு பிரிவில் டி.எஸ்.பியாக இருந்து வரும் தாவீந்தர் சிங், கடந்த ஆண்டு வீர தீரச் செயலுக்காக ஜம்மு காஷ்மீர் அரசிடம் இருந்து விருது பெற்றுள்ளார்.

தாவீந்தர் சிங்

பணத்தாசையால், தாவீந்தர் சிங் தீவிரவாதிகளுடன் இணைந்து பல குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார். ஸ்ரீநகர் இந்திரா நகர் பகுதியில் படாமிபான் கன்டோன்ட்மென்ட் பகுதியில் முக்கிய ராணுவ அதிகாரிகள் வசிக்கும் பகுதியில் தான் இவரின் வீடும் அமைந்துள்ளது. அங்கும் இரண்டு தீவிரவாதிகளை அவர் தங்க வைத்துள்ளார்.

தாவீந்தர் சிங்-யுடன் பயணித்த தீவிரவாதிகள், ஜம்முக்கு செல்ல 12 லட்சம் வரை வேண்டும் என்று பேர பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் நடந்த புல்வாமா தீவிரவாத தாக்குதலின், போது அந்த பகுதியில் தாவீந்தர் தான் டி.எஸ்.பியாகவும் இருந்துள்ளார்.

அப்சல் குரு தனது கடித்ததில், இவர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதால் நாடாளுமன்ற தாக்குதல் குறித்தும் தாவீந்தரிடம் நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என்று காஷ்மீர் ஜ.ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது வீட்டில் இருந்து ஏ.கே 47 துப்பாக்கிகள், 5 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில், ஜம்மு காஷ்மீர் மக்களின் ஹீரோவாக பார்க்கப்பட்ட தாவீந்தர் சிங் தற்போது, தீவிரவாதியாக பார்க்கபடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்