கர்ப்பம் தரிக்காத மனைவியை தூக்குக்கயிற்றில் ஏற்றிய கணவன்: கொடூர சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

மனைவி கர்பமடையாததால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலம் மல்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாக ஜோதி (26) என்பவர், கடந்த 2012ம் ஆண்டு சோமா சேகர் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்த ஆண்டுகள் கடந்தும் கூட குழந்தை பிறக்காததால், தினமும் மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் நாகஜோதி கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மூன்று ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு, கிராமத்து பெரியவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி சேகருடன், நாகஜோதியை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவன் உறங்கிக்கொண்டிருந்த போது, நாகஜோதியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அதன்பிறகு கொலையை மறைப்பதற்காக, தற்கொலை செய்துகொண்டது போல தூக்கில் ஏற்றியுள்ளார். இந்த சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர், சந்தேகத்தின் பேரில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சேகரிடம் விசாரணை மேற்கொண்டபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து நாகஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்