நான் ஏன் நிர்வாண மொடலானேன்? தமிழ் பெண்ணின் உருக வைக்கும் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் கலைக் கல்லூரி ஒன்றில் நிர்வாண மொடலாக பணியாற்றும் தமிழ் பெண்மணி ஒருவர் தமது பின்னணியை முதன் முதலாக பகிர்ந்துள்ளார்.

தமிழகத்தின் சென்னையில் பிறந்த தனலட்சுமி மணிமுதலியார், தமக்கு 5 வயது இருக்கும்போதே குடும்பத்துடன் மும்பை நகரில் குடியேறியுள்ளார்.

தாயாருக்கு நன்கு பரிச்சயமான மணி என்பவரை தனலட்சுமியின் 14-வது வயதில் மணம் முடித்து வைத்துள்ளனர்.

மூத்த மகனுக்கு 6 வயது இருக்கும் போது, தனலட்சுமி மீண்டும் கர்பமாகியுள்ளார். இந்த காலகட்டத்தில் கணவர் இறந்துவிட்டார். குழந்தைகளை வளர்க்க வேண்டிய முழு பொறுப்பும் தனலட்சுமியின் தலையில் விழுந்தது.

வேலை தேடி அலைந்து கொண்டிருந்த போது, பல ஆண்கள் என்னை தவறான நோக்கத்துடன் பார்த்தனர் என்கிறார் தனலட்சுமி.

இந்த நிலையில் கலைக் கல்லூரி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த ராஜம்மா என்ற பெண் அவருக்கு அறிமுகமானார்.

BBC / PRASHANT NANAWARE

அங்கு வேலை வாங்கித் தருமாறு கேட்டும், அவர் தனக்கு உதவி செய்யவில்லை என கூறும் தனலட்சுமி,

ஒருநாள் ராஜம்மாவை தேடி, அக்கல்லூரிக்கு சென்றிருந்த போது ஒரு வகுப்பறைக்குள் எட்டிப் பார்க்க, ராஜம்மாவின் கால்கள் மட்டும் தெரிந்தன என்றார்.

இது ராஜம்மாவுக்கு தெரியவர, பசியால் இறப்பதை விட இந்த வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் நிர்வாண மொடலாக தாம் ஒப்புக் கொள்ளவில்லை என்கிறார் தனலட்சுமி. அப்போது இரண்டு ஆசிரியர்கள் அறைக்குள் வந்து நிர்வாண மொடலாக சம்மதமா என கேடுள்ளனர்.

ராஜம்மாவின் கட்டாயத்தின் பேரில் தனலட்சுமி முதன் முறையாக நிர்வாண மொடலாக மாறியுள்ளார்.

BBC / PRASHANT NANAWARE

அந்த கலைக் கல்லூரியில் ராஜம்மாவிற்கு நல்ல மதிப்பு இருந்தது. நான் புதிதாக சேர்ந்தேன் என்பதால் எனக்கு அந்த மரியாதை கிடைக்கவில்லை.

போகப் போக மாணவர்களுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் பணி குறித்து நன்கு அறிந்து கொண்டேன். கடந்த 25 ஆண்டுகளாக நான் இந்த வேலையை செய்து வருகிறேன் என்கிறார் தனலட்சுமி.

தற்போது, நிர்வாணமாக என்னை ஓவியம் வரைய 1000 ரூபாயும், ஆடைகளுடன் வரைய 400 ரூபாயும் பெறுவதாக கூறும் அவர்,

பல கலைஞர்கள் தமக்கு நல்ல மரியாதை அளிக்கின்றனர். என் காலை தொட்டு வணங்குகிறார்கள் என்கிறார். ஆனால் இதுவரை தமது தொழில் தொடர்பில் தமது பிள்ளைகளிடம் வெளிப்படுத்தியது இல்லை எனவும்,

பேராசிரியர்களுக்கு டீ போட்டு கொடுக்கும் பணியும், துப்புரவு பணியும் செய்து வருவதாக அவர்களிடம் கூறிவந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்