சுடிதார் அணிந்துகொண்டு பெண்களின் உள்ளாடைகளை திருடும் வினோத திருடன்: அச்சத்தில் மக்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

கோவையில் நைட்டி, சுடிதார் மற்றும் கொலுசு அணிந்துகொண்டு உள்ளாடைகளை திருடும் வினோத திருடனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள மீனாட்சி குடியிருப்பு பகுதியில், 245 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் காலணிகள் திருடுபோயுள்ளன.

அவை அனைத்தும் அப்பகுதியில் உள்ள ஆளில்லா வீடு ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த திருடன் பெண்கள் அணியும் நைட்டி, சுடிதார் டாப்ஸ் மற்றும் கொலுசுகள் அணிந்தபடி வலம்வரும் காட்சிகள் பதிவாகியிருந்துள்ளன.

இதனை பார்த்து அச்சமடைந்த மக்கள், பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர். மேலும், குடியிருப்புவாசிகள் குழுக்களாக பிரிந்து தினமும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

அப்படி இருந்தும்கூட, கடந்த 4 நாட்களாக மீண்டும் அந்த சைக்கோ திருடன் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் காலணிகளை திருடி சென்றுள்ளான்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்