கர்ப்பமாகி குழந்தை பெற்ற தமிழகத்தை சேர்ந்த 17 வயது சிறுமி! பின்னர் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் 17 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த 17 வயது சிறுமியும், ஆரியூர்நாடு குழிவளவு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (22) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

திருமணம் செய்து கொள்ளவதாக கூறி அப்பெண்ணை ஆசைக்கு இணங்க வைத்து நந்தக்குமார் கர்ப்பமாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்து நடந்ததை அறிந்தனர்.

பின்னர் திருமணம் செய்வதாக கூறிய நந்தகுமாரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் திருமணம் குறித்து பேசியுள்ளனர். ஆனால் நந்தகுமார் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில், நந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers