35 சிறுமிகளை அடைத்து வைத்து பாலாத்காரம்! நடந்தது என்ன? சிக்கிய நபர்கள்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் 35 சிறுமிகள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 8 பெண்கள் உட்பட முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் அரசு நிதி உதவியுடன் சிறுமியர் காப்பகம் நடத்தி வந்தார்.

இந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, காப்பகத்தில் இருந்து 35 சிறுமிகளை மீட்டனர். அதன் பின் அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து 20 பேர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின் நீதிமன்ற உத்தரவினால் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

டெல்லியில் சாஹேத்தில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த பின்னர், 35 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 8 பெண்கள் உட்பட 19 பேர் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பிரிஜேஷ் தாக்கூர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers