முகேஷ் அம்பானி வீட்டில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது யார்? வெளிவரும் முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் வீடு தெற்கு மும்பையில் உள்ள அன்டிலாவில் உள்ளது.

இவரது வீட்டை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படி புதன்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த தகவலை மும்பை பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வீரரின் உடல் டவுன்டவுன் ஜே.ஜே மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த தற்கொலை தொடர்பாக மும்பை பொலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்