திருமணமான சில மணி நேரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி! செய்வதறியாது திகைத்து நின்ற சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே கடத்தி செல்லப்பட்ட காதல் மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மெய்யப்பன் என்பவரும் சரளை சண்முகபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஜீவிதாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்காததால், வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துக்கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த பெண் வீட்டார், இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு ஜீவிதாவை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் செய்வதறியாது திகைத்து அதிர்ச்சியடைந்த மெய்யப்பன், தனது மனைவியை மீட்டு தருமாறு காவல் நிலையத்தில் கண்ணீருடன் கோரியுள்ளார்.

பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்துகொண்டதால் கோபமடைந்த பெற்றோர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக மெய்யப்பன் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்