டார்ச்சர் செய்யும் 3 தோழிகள்... வைரலாகும் ஆபாச படம்! கண்ணீர் விடும் டிக் டாக் பெண்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் டிக் டாக் மூலம் தனக்கென்று சில ரசிகர்களை வைத்திருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாக சமூகவலைத்தளங்களில் வைரலானதால், இதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்ததுடன் அதற்கான காரணத்தையும் வேதனையுடன் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கடல்கன்னி. 39 வயதான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் இல்லாததால், விவாசாயம் மற்றும் கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் பொழுதுபோக்கிற்காக அவ்வப்போது டிக்டாக்கில் வீடியோ ஒன்றை இவர் பதிவிட, அதற்கு ஆதரவு அதிகமானதால், டிக்டாக்கில் இவரை 33 ஆயிரம் பேர் பின் தொடர ஆரம்பித்தனர்.

நல்ல கருத்துக்களை கூறி வந்ததால், இவரை பலரும் பின் தொடர் ஆரம்பித்தனர். அப்படி டிக் டாக் மூலம் விழுப்புரத்தை சேர்ந்த லதா, சென்னையை சேர்ந்த கவிதா, சுமதி என்பவர்கள் கடல்கன்னிக்கு அறிமுகமாகியுள்ளனர்.

இவர்கள், அவரிடம் நட்பாக பேசி நெருக்கமாகியுள்ளனர். இவர்கள் ஆபாசமாக டிக்டாக் செய்பவர்களாம், இதன் காரணமாகவே கடல்கன்னி அவர்களுக்கு பலமுறை இது எல்லாம் தவறு என்று அறிவுரை கூறியுள்ளார்.

இருப்பினும் அவர்கள் கேட்கவில்லை, ஆனாலும் தன்னுடைய குடும்ப கஷ்டத்தை இந்த மூன்று பெண்களிடமும் கூறி கடல்கன்னி அழுது வந்துள்ளார்.

அப்படி ஒரு முறை இவர்கள் ஆறுதல் கூறும் போது, தங்களுக்கு தெரிந்தவரிடம் நெருங்கி பழகினால் 2 லட்சம் ரூபாய் தருவார் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி விபச்சாரத்திலும் ஈடுபட கட்டாயப்படுத்தியுள்ளனர்.

ஆனால் கடல்கன்னி மறுத்ததால், இந்த விஷயத்தை இவள் வேறு யாரிடமும் சொல்லிவிடுவாள், நம்மை பற்றி கெட்ட பெயர் வந்துவிடும் என்று கூறி, அவர்கள் இதை பற்றி யாரிடமும் வெளியே சொல்ல கூடாது, குறிப்பாக டிக்டாக்கில் பதிவிட கூடாது, என்று மிரட்டி 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்ய, அவர்கள் கடல்கன்னியின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து டிக்டாக்கில் பதிவிட்டுள்ளனர்.

டிக்டாக்கில் தன்னுடைய ஆபாச படத்தை பார்த்த கடல்கன்னி அதிர்ச்சியடைந்து, எஸ்.பி அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

ஆனால் அந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காமல், இழுத்தடித்து வருவதால், 3 தோழிகளின் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை வரை சென்றதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers