கடுமையான காய்ச்சல்: இந்தியர்கள் 6 பேருக்கு தடை விதித்த சீனா

Report Print Arbin Arbin in இந்தியா

கொரோனா வியாதியால் தத்தளிக்கும் சீனாவில் இருந்து இந்தியர்கள் 6 பேரை திருப்பி அனுப்ப அங்குள்ள சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பீதியில் சிக்கி தவித்த இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர்.

முதற்கட்டமாக 330 பேரை அழைத்து வர சென்ற நிலையில் அவர்களில் 6 பேருக்கு கடும் காய்ச்சல் இருப்பதால் அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப சீனா மறுத்துவிட்டது.

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா நோயால் உலகம் முழுவதும் பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை சீனாவில் மட்டும் 300 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் சீனாவில் வசிக்கும் பிறநாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உலகின் பல நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றன.

அந்த வகையில் சீனாவில் இருந்து தாயகம் திரும்பும் பயணிகள் அனைவரும் உச்சகட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கியுள்ள சீனாவின் வுஹான் நகரில் வசிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக, ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் நேற்று முன்தினம் அனுப்பிவைக்கப்பட்டது.

அங்கிருந்து 330 இந்தியர்களை விமானத்தில் அழைத்துவர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதில் 6 பேருக்கு கடும் காய்ச்சல் இருந்தது, வுஹான் விமான நிலைய சோதனையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர்களை விமானத்தில் அனுமதிக்க சீன அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி அவர்களை வுஹான் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக் கப்படும் என்று தெரியவந்துள்ளது.

இந்தியா திரும்பியவர்களில் பெரும்பாலானோர் கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 22 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்