தமிழகத்தில் கொரோனா வைரஸ்.! சென்னை அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி

Report Print Basu in இந்தியா

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவில் இருந்து கோலாலம்பூர் வழியாக சென்னை வந்த லியோ விஜின் என்ற நபரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரவு கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்த விமான பயணிகளை சோதனை செய்த போது லியோ விஜினுக்கு கடும் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து மருத்துவ குழுவினர் அவரை சோதனை செய்த போது அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கலாம் என சந்தேகமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, லியோ விஜின் உடனடியாக சென்னை ராஜீவ் காந்த அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வரும் நிலையில் லியோ விஜின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

அதேபோல், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்தது. திருச்சி அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்