கடைசி நொடியில் தாலி கட்டும்போது திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்களின் வீடியோ

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் மணப்பெண் ஒருவர் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் தடுத்து நிறுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் கேரளாவில் நடந்ததாக தெரியவருகிறது. திருமணத்தில் கலந்துக்கொண்ட நபர் ஒருவர் இந்நிகழ்வை படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், மண்டபத்தில் உறவினர்கள் கூடியிருக்க மணமேடையில் இரு வீட்டார் முன்னிலையில் மணமகன்-மணப்பெண் அமர்ந்திருக்கின்றனர்.

மணமகன் தாலி கட்டும்போது திருமணப்பெண் அவரது கையை பிடித்து தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேடையில் இருந்தவர்கள் மற்றும் மணமகள் சமாதானம் செய்ய முயன்றும் பெண் ஒத்துக்கொள்ளவில்லை. கடுப்பான மணமகன் மேடையிலிருந்து எந்திரித்து சென்றுள்ளார்.

மாண்டபத்தில் கூடியிருந்த உறவினர்கள் அனைவரும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெண் திருமணத்தை நிறுத்தியதற்கான காரணம் தெரியவில்லை.

தற்போது, குறித்து வீடியோ இணையத்தில் வைரலாக, என்ன நடந்தது என்று தெரியாமல் நெட்டிசன்கள் மணப்பெண்ணை விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்