11 வயது சிறுமியை 16 பேர் சீரழித்த கொடூரம்! குற்றவாளி என தெரிந்தும் அவன் தாய் செய்த மோசமான செயல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தை உலுக்கிய அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரது தாய் நீதிமன்றத்தின் வாசலில் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாய் பேச முடியாத, காது கேட்காத 11 வயது சிறுமியை லிப்ட் ஆபரேட்டர் முதல் அந்த அப்பார்ட்மென்ட்டில் வேலை பார்த்த வாட்ச்மேன், தண்ணீர் கேன் போடுபவர் என பலரும் சீரழித்தனர்.

25 வயது முதல் 66 வயது வரை உள்ள மொத்தம் 17 பேர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர்.

கடந்த 2018, ஜூன் மாதம் இந்த சம்பவம் வெளியே வந்தது.

குற்றவாளிகளில் 17 பேரில் ஒருவர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார். தோட்டக்காரர் குணசேகரன் தரப்பில் போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த நிலையில் அவர்களின் தண்டனை விவரத்தை பிப்ரவரி 3-க்கு ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், நேற்று தீர்ப்பு வெளியாகும் என்பதால், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் உறவினர்கள் சோகத்தோடு நீதிமன்ற வளாகத்தில் கூடினர்.

15 பேரும் குற்றவாளிகள் என்று சொன்னதுமே அந்த பெண்கள் கதறி அழுதனர்.

அதில் ஒரு பெண் ஆவேசமாக கத்த ஆரம்பித்துவிட்டார். என் மகன் அந்த அபார்ட்மென்ட்டில் சேர்ந்து 2 மாதம் தான் ஆகுது.

ஒரு மாச சம்பளம் தான் வாங்கினான். அதுக்குள்ள ஜெயில்ல தூக்கி வெச்சிட்டாங்க, என் மகனுக்கு நீதி கிடைக்க மனித உரிமை ஆணையத்துக்கு போக போகிறேன் என கூறியதோடு கெட்ட கெட்ட வார்த்தைகளால் ஆபாசமாக பேசினார்.

பின்னர் உச்சக்கட்டமாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு சாபமும் விடுத்தார்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர், மேலும் இது போன்ற மோசமான மகனை பெற்றது மட்டுமில்லாமல் அவன் குற்றவாளி என தெரிந்தும் இப்படி நடந்து கொள்ளும் அவன் தாயையும் கைது செய்ய வேண்டும் என கூறினார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்