4 நாட்களாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு

Report Print Vijay Amburore in இந்தியா

பூட்டிய வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபதேபூரின் சாந்திபூர் பகுதியில், நான்கு நாட்களாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, கிராமத்தை சேர்ந்த சிலர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது 5 பேர் சடலமாக கிடந்துள்ளனர்.

இதனையடுத்து 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதில், இறந்த கிடந்தவர்கள் ஷியாமா மற்றும் அவரது நான்கு மகள்கள் பிங்கி, பிரியங்கா, நாங்கி, வர்ஷா என்பது தெரியவந்தது.

மேலும், ஷியாமாவின் கணவர் தினமும் மது அருந்திவிட்டு மனைவியை துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் கணவன்- மனைவிக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவ தொடர்பாக பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்