கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய வாயில்லா ஜீவன்! தைரியமாக இளம்பெண் செய்த செயல்: குவியும் பாராட்டு

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய நாயை காப்பாற்ற இளம்பெண் கிணற்றுக்குள் இறங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

உலகில் நாளுக்கு நாள் மனிதாபிமானம் குறைந்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் மூலம் புதிய நம்பிக்கை பிறக்கிறது.

கர்நாடகா மாநிலம் மங்களுரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. நாய் ஒன்று தற்செயலாக 30அடி கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடியுள்ளது.

இதைக்கண்ட இளம்பெண் ஒருவர், மற்றவர்கள் உதவியுடன் உடலில் கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.

பின் தண்ணீரில் போராடிக்கொண்டிருந்த நாயின் உடலில் கயிரை மாட்டியுள்ளார். மேலிருந்த நபர்கள் கயிரை இழுத்து நாயை வெளியே எடுத்துள்ளனர். வெளியே வந்த நாய் தெறித்து ஓடியுள்ளது.

இதனையடுத்து, அப்பெண்ணை கிணற்றிலிருந்து வெளியேறியுள்ளார். குறித்த சம்பவம் முழுவதும் படமெடுத்து இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் பலர் பெண்ணின் தைரியத்தையும், வாயில்லா ஜீவனின் உயிரை காப்பாற்ற அவர் மேற்கொண்ட முயற்சியையும் பாராட்டி வருகின்றனர்.

தற்செயலாக அதில் விழுந்த நாயை மீட்பதற்காக ஒரு பெண் தைரியமாக மங்களூரு கிணற்றில் ஏறும் வீடியோ ஒன்று இணையத்தில் ரவுண்டுகள் செய்து சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீட்பின் முழு சம்பவமும் ஒரு ட்விட்டர் பயனரால் "நாயைக் காப்பாற்றிய பெண்ணை ஆசீர்வதியுங்கள்" என்ற தலைப்பில் பகிரப்பட்டது.

வீடியோவில், பெண் ஒரு கயிற்றைப் பயன்படுத்தி நீர் ஆதாரத்தின் சுவர்களில் இருந்து இறங்குவதைக் காணலாம், அதே நேரத்தில் கிணற்றுக்கு வெளியே சிலர் நிற்பதைக் காணலாம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்