கொரோனா வைரஸால் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் குத்தாட்டம் போட்ட இந்தியர்கள்!

Report Print Vijay Amburore in இந்தியா

சீனாவிலிருந்து விமானத்தில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவின் வுஹான் நகரத்தில் துவங்கியதாக நம்பப்படும் கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலால், தற்போதுவரை 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 14000க்கும் அதிகமானோர் தொற்றுநோய் தாக்குதலுக்குள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை, உலகநாடுகள் அனைத்தும் விமானத்தின் மூலம் மீட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சீனாவிலிருந்து திரும்பக் கொண்டுவரப்பட்டு, மானேசரில் உள்ள இந்திய ராணுவத்தின் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் வைக்கப்பட்டிருக்கும் இந்திய மாணவர்கள் சிலர், நாடு திரும்பிய மகிழ்ச்சியில் 'Byah Di Anpadh Hali Ke' எனும் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்