வலியால் அவஸ்தை! திருமணமான 4 மாதத்தில் கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு புதுப்பெண் எடுத்த முடிவு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான 4 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அது தொடர்பான பின்னணி தெரியவந்துள்ளது.

கொளத்தூர் பகுதியை சேர்ந்த தீபக் என்பவரும் அவரின் அத்தை மகளான வேதவள்ளியும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் வேதவள்ளி கணவன் தீபக்கை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டிற்குள் அலறல் சப்தம் கேட்க பெற்றோர் சென்று பார்த்த போது, வேதவள்ளி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, உயிருக்கு போராடிய வேதவள்ளி, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மனைவி தீக்குளித்த செய்தியறிந்த கணவர் தீபக், எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்நிலையில் வேதவள்ளி தற்கொலை தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.

இதில் வேதவள்ளி தனது சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களால் ஏற்பட்ட வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்தே இனியும் வலியை பொறுத்து கொள்ள முடியாது என தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்