வளாகத்தின் முன் உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியை!

Report Print Vijay Amburore in இந்தியா

கல்லூரி வாயிலின் முன் பெண் விரிவுரையாளர் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அங்கிதா பிசுடே (25) என்பவர் மடோஷ்ரீ ஆஷதாய் குமாவர் மஹிலா வித்யாலயாவில் கல்லூரி விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் இன்று காலை 7.15 மணியளவில் தனது கல்லூரி பணிக்கு சென்றுகொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபரால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார்.

அங்கிருந்த சிலர் இதனை பார்த்து பதறிப்போய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததோடு, அங்கிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Credits: Times of India

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அங்கிதா, முகம், வலது மேல் மூட்டு, இடது கை, மேல் முதுகு, முழு கழுத்து ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்றாம் வகுப்பு தீக்காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விக்கி நாக்ரலே என்பவரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை முயற்சிக்கான காரணம் எதுவும் அறியப்படவில்லை. விக்கி நாக்ரலே திருமணமானவர் என்பதால் ஒருதலைப்பட்ச காதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்