திருமணத்திற்கு முன்பே காலையில் குழந்தை பெற்ற இளம் பெண்! அதன் பின் மாலையில் நடந்த சம்பவத்தின் பின்னணி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணம் ஆகாமலே பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு அன்று மாலையே காதலருடன் திருமணம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திண்டிவனம் அருகே உள்ள கடவம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு கோகிலா என்ற 20 வயது மகள் உள்ளார்.

தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ.ஆங்கிலம் 30ஆம் ஆண்டு படித்து வரும் கோகிலா, அதே பகுதியை சேர்ந்த செங்கேணி என்பவரின் மகன் பரமசிவம்மை(25) காதலித்துள்ளார்.

அதன் பின் இருவரும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர், ஒரு கட்டத்தில் இருவரும் பல முறை தனிமையில் இருந்தனர், அதன் காரணமாக கோகிலா கர்ப்பமானார்.

இது வீட்டிற்கு தெரிந்தால், பெரிய பிரச்சனையாகிவிடும் என்பதால், அதற்கு பயந்தே கோகில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியான நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று கோகிலாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு கல்லூரி மாணவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடனடியாக மருத்துவர்கள், குழந்தையின் தந்தை பெயரை கேட்டனர். ஆனால் கோகிலா திருதிருவென விழித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், திண்டிவனம் மகளிர் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பொலிசார் விரைந்து சென்று, கோகிலாவிடம் விசாரித்தனர். அதன்பிறகுதான் அவர், காதலர் பரமசிம் மூலம் தாயானது தெரியவந்ததை அடுத்து பரமசிவத்தை அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது அவர், கோகிலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். பின்னர் 2 பேரும் திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பிறகு காவல்நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருவரும், மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

காலையில் பிரசவம் ஆனநிலையில், மாலையில் காதலரை கல்லூரி மாணவி திருமணம் செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்