எப்போ போன் செய்தாலும் மனைவி நம்பர் பிசியாவே இருக்கும்! மர்மத்தை கண்டுபிடித்தேன்.. புதுமாப்பிள்ளை வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக கணவரே கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்க விட்டது அம்பலமானது.

நாகை மாவட்டத்தை சேர்ந்த பாலு (34) என்பவருக்கும் நாடியம்மாள்(26) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் சில நாட்களிலேயே கணவன்-மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்திற்கு பின்னர் நாடியம்மாள் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து நாடியம்மாளின் பெற்றோர், தங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பொலிசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று நாடியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் இதை பொலிசார் தற்கொலை வழக்காக பதிவு செய்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி பாலு பொலிசில் சரண் அடைந்து தனது மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்டதாக கூறினார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பாலு அளித்துள்ள வாக்குமூலத்தில், திருமணத்திற்கு முன்பே என் மனைவிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளது.

அந்த பழக்கம் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து வந்தது. இதனை கண்டுபிடித்த நான் எனது மனைவியை பலமுறை கண்டித்துள்ளேன். ஆனாலும் தொடர்ந்து என் மனைவி செல்போன் மூலம் அந்த நபருடன் பேசிவந்தார்.

நான் எப்போது என் மனைவிக்கு தொடர்பு கொண்டாலும் லைன் பிசியாகவே இருக்கும்.

இதனால் அடிக்கடி எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று காலை என்னிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களை வீசி தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், நைலான் கயிற்றால் என் மனைவி நாடியம்மாளின் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை என நாடகம் நடத்தினேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்