விசா வைத்திருந்தாலும் சீனாவில் இருந்து யாரும் இந்தியாவிற்குள் வர தடை! மத்திய அரசு உத்தரவு

Report Print Abisha in இந்தியா

விசா உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்தாலும், சீனா சென்றவர்கள் இனி இந்தியாவிற்கு நுழைய தடைவிப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், ஹுபே மாகாணத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அரசு ஏர் இந்தியா போயிங் 747 ரக சிறப்பு விமானத்தை அனுப்பி சனிக்கிழமை அழைத்து வந்தனர்.

அவர்கள், அனைவரும் தனி மருத்துவ முகம் அமைக்கப்பட்டு அதில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 14நாட்கள் தொடர் காண்காணிப்பிற்கு பின் அனைவரும் சொந்த வீடுகளுக்கு அனுப்பபடுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட 25நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதை அடுத்து, அதை கட்டுப்படுத்த சீனாவை சேர்ந்தவர்கள், சீனப் பயணிகள் மற்றும் அங்கிருந்து இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினர் ஆகியோரின் இ-விசாவை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இதற்கு தற்போது சீனாவில் நிலவி வரும் சூழல்தான் காரணமாகும். இ-விசா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதனால், சீனாவிலிருந்து இந்திய வரவிரும்பும் யாருக்கும் இ-விசா வழங்கப்படமாட்டாது.

இந்தியாவிற்கு கட்டாயம் வந்தாகவேண்டும் என்ற நிலைபாடு உள்ளவர்கள், பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அல்லது ஷங்காய் அல்லது குவாங்சோவில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு திரும்ப பெறும் வரை கடைபிடிக்கப்படும் என்றும், இந்த நடவடிக்கை உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்