கொரோனாவால் பலர் இறந்ததை தாங்க முடியல! நான் மருந்து கண்டுபிடிச்சிருக்கேன்.. ஆச்சரியப்படுத்திய தமிழ் மாணவன்

Report Print Raju Raju in இந்தியா

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன் என தமிழ் மாணவன் ஒருவர் கூறிய நிலையில் அவரின் முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர்.

சீனாவை தொடக்கம் கண்ட கொரோனா வைரஸால் இதுவரை 400க்கும் அதிகமானோர் அங்கு இறந்துள்ளனர்.

இது தவிர பிலிப்பைன்ஸ், ஹாங்காங்கில் மொத்தம் இருவர் இறந்துள்ளனர்.

இந்தச் சூழலில், கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன் என தமிழத்தின் திருப்பூரைச் சேர்ந்த 9-வது படிக்கும் மாணவன், மருந்து பாட்டிலுடன் ஆட்சியரை தேடிவந்த சம்பவம் நடந்திருக்கிறது.

வெங்கடாசலம் - தங்கம் தம்பதியரின் மகன் இசக்கிராஜ் (14). இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாவும், அதை கொடுத்து ஆய்வகத்தில் பரிசோதனை செய்ய வந்திருக்கிறேன் எனவும் கூறி கையில் மருந்து பாட்டிலுடன் ஆட்சியரை சந்திக்க வந்திருந்தார்.

இசக்கிராஜ் கூறுகையில், கொரோனா வைரஸால் சீனாவில் எத்தனையோ பேர் உயிரிழந்திருக்காங்க. பலரும் பாதிக்கப்பட்டிருக்காங்க. இதை என்னால தாங்கிக்கவே முடியலை.

அதனால தான் என் பாட்டிகிட்ட ஆலோசனை கேட்டு கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபுடிச்சிருக்கேன்.

மூலிகைச் செடி, மருத்துவம் சம்பந்தமான புத்தகத்தை ஏற்கெனவே படிச்சிருக்கேன்.

வேப்பிலை, துளசி, நிலவேம்பு, தூதுவளை, பப்பாளி இலை, சஞ்சீவி வேர் மற்றும் வெட்டிவேர் போன்ற 11 வகை மூலிகைகளை ஒருநாள் முழுக்க வெயிலில் காய வைத்து அதை மறுநாள், அதை நீரில் கொதிக்கவைத்து, இறக்கி வடிகட்டி சேகரித்தேன்.

கொரோனாவுக்கான மருந்து தயாரானது. இந்த மூலிகைச் சாற்றை சாப்பிட்டால், வெள்ளையணுக்கள் அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, நோய் பரவலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்தும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்