அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி: தொண்டர்களுக்கு முதல் உத்தரவிட்ட முதலமைச்சர்!

Report Print Abisha in இந்தியா

டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கட்சியான ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றுள்ளது.

70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தல், கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 7 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

இதன் மூலம், அருதி பெரும்பான்மை பெற்று ஆம் ஆத்மி எதிர்கட்சி இல்லாமல் ஆட்சி அமைக்க உள்ளது.

வெற்றி உறுதியானதும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் தொண்டர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், வெற்றி கொண்டாட்டத்தில், பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, டெல்லியில் ஜாமியாமில்லா மாணவர்கள் மீதான தாக்குதல், சிஏஏக்கு எதிராக போராடியவர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்டவை பாஜக மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று கருத்துகணிப்புகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்