தன்னால் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்கிற அச்சத்தில் விபரீத முடிவெடுத்த நபர்!

Report Print Vijay Amburore in இந்தியா

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக நம்பிய நபர், மற்றவர்களுக்கும் பரவிவிடக்கூடாது என்கிற அச்சத்தில் தனது உயிரையே மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் தொட்டம்பேடு கிராமத்தைச் சேர்ந்த 54 வயதான பாலகிருஷ்ணய்யா என்பவர், மருத்துவ ஆலோசனைக்காக சனிக்கிழமையன்று ருயா அரசு பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவரது குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, மருத்துவர்கள் கூறியதை தவறாக புரிந்துகொண்ட அவர் தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக நம்பியுள்ளார்.

அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என குடும்ப உறுப்பினர்கள் பலமுறை கூறியும் கூட, யாரையும் நெருங்கவிடாமல் கல்லால் எரிந்து விரட்டியுள்ளார்.

கிராம மக்கள் அனைவரையும் விலகி இருக்கும்படி கூறிய அவர், பெரும் பீதியில் குடும்பத்திற்கும் கிராமத்திற்கும் அச்சுறுத்தல் கொடுப்பதாக நினைத்து வருந்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான பல வீடியோக்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்த அவர், கதவை பூட்டிக்கொண்டு நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொரோனா குறித்த தவறான தகவல்களால் இத்தகைய தற்கொலை சம்பவம் நடந்திருப்பது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers