மூன்று திருமணம் செய்து கொண்ட இளம்பெண்! பிறந்த குழந்தைக்கு நானே தந்தை என கூறிய 4ஆம் நபர்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மூன்று திருமணங்கள் செய்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு நான்காவதாக வந்த நபர் தந்தை என சொந்தம் கொண்டாடுவது அதிகாரிகளை தலைசுற்ற வைத்துள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த இளம்பெண் தனது 8 மாத குழந்தையை விற்பனை செய்துவிட்டதாக குழந்தைகள் நல அலுவலர்களுக்கு புகார் வந்தது. விசாரணையில் இறங்கிய அதிகாரிகள், அந்தப் பெண்ணை குழந்தையுடன் அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

குழந்தைகள் நல அலுவலகத்துக்கு வந்த பெண்ணை விசாரித்ததில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகியிருக்கிறது.

கட்டிட வேலைக்குச் சென்றுவந்த அந்த பெண்ணுக்கு அங்கு ஏற்கனவே திருமணமான ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, அவர் விவாகரத்து செய்துள்ளார்.

இதனையடுத்து அந்தப் பெண்ணை ராமநாதபுரம் அழைத்து வந்த வினோத், தனியாக வீடு எடுத்து தங்கவைத்து அவரை திருமணம் செய்து கொண்டு சில காலம் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

பின்னர் வெளிநாடு செல்வதாகக் கூறிச் சென்றவர் ஓரிரு மாதங்கள் பணமும் அனுப்பியுள்ளார். அதன் பிறகு வினோத் அங்கேயே இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.

இதையடுத்து நான்கே மாதங்களில் மாற்றுத் திறனாளி ஒருவரை 3வதாக அப்பெண் திருமணம் செய்துள்ளார். இதற்குள் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

அந்தக் குழந்தையை வெளிநாடு சென்று இறந்ததாகக் கூறப்படும் வினோத்தின் உறவினர்கள் கேட்கவே, அவர்களிடம் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார் அந்தப் பெண். இந்த நிலையில்தான் குழந்தையை அவர் விற்றுவிட்டதாகவும் அது தன்னுடைய குழந்தை என்றும் 4வதாக ஒருவர் புகாரளித்துள்ளார்.

உத்திரகோசமங்கையைச் சேர்ந்த சரத் என்கிற வேல்முருகன் கொடுத்துள்ள அந்தப் புகாரினால் அதிகாரிகள் குழப்பத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.

2வது கணவரான வினோத் வெளிநாடு சென்ற இடைவெளியில் அந்தப் பெண்ணுடன் தாம் பழகியதாகவும் அதன் மூலம் பிறந்ததே அந்தக் குழந்தை என்றும் சரத் தனது புகாரில் கூறியுள்ளார். அவரது புகாரை மறுக்கும் அந்தப் பெண், அது வினோத்தின் குழந்தைதான் எனக் கூறுகிறார்.

இதனால் குழம்பி போன அதிகாரிகள், குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு DNA பரிசோதனைக்காக நீதிமன்றத்தை நாடுமாறு கூறி சரத்தையும் அந்தப் பெண்ணையும் வழியனுப்பி வைத்தனர்.

இதனிடையில் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான அந்தப் பெண் இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்