கொரோனா வைரஸ் பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்..! மீளா துயரத்தில் தவிக்கும் குடும்பம்

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் கொவிட்-19 என புதிய பெயர் வைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக பயத்தில் நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டது குடும்பத்தினரை மீளா துயத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றி கொவிட்-19 இன்று 28 நாடுகளுக்கு பரவியுள்ளது. பிப்ரவரி 9ம் திகதி வரை சுமார் 1,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 9ம் திகதி மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் 3 பேர் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு தீவிர கண்காணப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் அனைவரும், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதான பாலா கிருஷ்ணா என்ற நபர், தனக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக சந்தேகமடைந்து தற்கொலை செய்துள்ளார்.

நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

கொவிட்-19 நோய்க்கு சீனாவில் மட்டும் 1,113 பேர் பலியாகியுள்ள நிலையில், சீனாவுக்கு வெளியே, ஹொங்கொங்கில் ஒருவரும், பிலிப்பைன்ஸில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...