வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட நால்வர்! சிக்கிய கடிதம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தைபரம்பத் வினோத் (44). இவர் மனைவி ரேமா (38). தம்பதிக்கு நயனா என்ற 17 வயது மகளும், நீரஜ் என்ற 9 வயது மகனும் இருந்தனர்.

இந்நிலையில் நால்வரின் சடலங்களும் அழுகிய நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர்களது வீட்டிலிருந்து பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

சடலங்கள் கைப்பற்றப்பட்டதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே மூவரும் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில், தவறு செய்தவர்களை தவிர அனைவரையும் மன்னிக்கிறோம் என எழுதப்பட்டுள்ளது.

நால்வரின் சடலங்களுக்கும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இறுதிச்சடங்குகளும் நடத்தப்பட்டன.

வினோத் மற்றும் குடும்பத்தார் எந்த விதமான நிதி நெருக்கடியிலும் இல்லை என அவர்கள் உறவினர்கள் கூறியுள்ளது பொலிசாருக்கு இந்த மர்ம மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்