அழுகிய நிலையில் ஒரே வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட ஐவர்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் பஜன்புர பகுதியிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சாரதியான ஷம்பு என்பவரும் அவரது குடும்பவுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஷம்புவின் பிள்ளைகள் மூவருக்கும் 18, 14 மற்றும் 12 வயது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஐந்து பேரின் சடலங்களும் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. மரணமடைந்து 6 நாட்கள் ஆகியிருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

நிதி நெருக்கடி காரணமாக ஷம்பு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்