வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்! குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கேட்வாசல் தெருவைச் சேர்ந்தவர், தமிழ்செல்வி. கணவர் இறந்துவிட்ட நிலையில், இவர் அங்கிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இவருடைய மகன் கோயமுத்தூரில் இருக்கும் பொறியல் கல்லூரியில் படித்து வந்ததால், தமிழ்செல்வி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்செல்வி அவருடைய வீட்டின் மாடியில் மிகவும் மோசமாக படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவருடைய வாயினுள் துணியை திணித்து நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலையாளிகள் கொலை செய்திருந்தனர்.

இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் வீட்டில் நடத்திய சோதனையில், வீட்டில் இருந்த சுமார் 1,40,000 ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், வன்கொடுமை, கொடூரக் கொலை ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்த பொலிசார், இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மகேந்திரன் என்ற ராஜேந்திரன், கார்த்திக், ராஜேஷ் என்ற ராஜேஷ் கண்ணா, வசந்தகுமார் ஆகிய 4 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இவர்கள் நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், சம்பவ இடத்தில் கிடைத்த தரவுகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதில் கிடைத்த முடிவுகளை ஆதாரமாக வைத்து வாதாடினார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ராஜேஷ் என்ற ராஜேஷ்கண்ணா, வசந்தகுமார் ஆகியோரின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகளான இருவருக்கும் பாலியல் வன்கொடுமை செய்து, பின் கொலை செய்த பிரிவின் கீழ் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் ராஜேஷ் என்ற ராஜேஷ்கண்ணாவுக்கு ஆயுள் தண்டனையும் வசந்தகுமாருக்கு 10 வருட தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...