ஒரு வருடங்களாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத புல்வாமா தாக்குதல்! நீடிக்கும் சந்தேகம்

Report Print Abisha in இந்தியா

இன்றுடன் புல்வாமா தாக்குதல் நடந்து ஒரு வருடங்கள் ஆன நிலையில், இது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பது பெருத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

2019ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி மாலை வேளையில், ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் துணை இராணுவ படையினர் பயணித்து கொண்டிருந்தனர். அதில் புல்வாமா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி காரை துணை இராணுவ படையினர் பயணித்த ஒரு பேருந்தின் மீது மோதி வெடிக்க செய்தான். அதில், 40 துணை இராணுவ படையினர் கொல்லப்பட்டனர்.

ஜெய்ஷ்-இ-முகமது குழு, பாகிஸ்தானை மையமாக கொண்டு இயக்கி வந்துள்ளது. மேலும், அந்த அமைப்பின் தலைவராக உலக பயங்கரவாதி மசூத் அசார் இருந்துள்ளான்.

அந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து இராணுவ வீரர்களுடைய ஆயுத கிடங்கில் இருந்து வாங்கப்பட்டது அல்ல என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

தடயவியல் அறிக்கையின் படி இதில், 25 கிலோ பிளாஸ்டிக் வெடி மருந்துகள் கொண்டு அது தயாரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த தாக்குதலுக்கு பின் மார்ச் மற்றும் ஜுன் மாதங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், முடசிர் அகமது கான் மற்றும் சஜ்ஜாத் பட் ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் புல்வாமா தாக்குதலுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.

அவர்கள் இருவரும் கொல்லப்பட்டதால் குற்றப்பத்திரிகையும் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த தாக்குதலில், இன்னும் விலகாத மர்மங்கள் உள்ளது. ஏனெனில், இந்த தாக்குதலில், விசாரணைக்கு உதவிய குற்றவாளிகளும் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். அதில், பயன்படுத்தப்பட்ட காரும் பலர் பயன்பாடுத்திய பின் வாங்கப்பட்டுள்ளது. கடைசியாக சஜ்ஜாத் பட் என்பவர் கையில் இருந்தபோது இந்த தாக்குதலுக்கு அது பயன்படுத்தப்பட்டுள்ளது. அவனும் கொல்லப்பட்டுவிட்டான்.

மேலும், சந்தேகிக்கப்படும் நபர்கள் யாரும் உயிருடன் இல்லாததால், பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்ப பொருட்கள் உறுதி செய்யப்பட முடியாமல் இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த கார் எவ்வாறு வாக்கப்பட்டது, அதில்அகமதுதார்-க்கு முன் யார் அந்த காரை ஓட்டி வந்தார் என்பது குறித்து இதுவரை கண்டறிய முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவை பொறுத்தவரை 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை முறையான ஆவணங்கள் இல்லை என்றால் காலம் மேலும் எடுத்துக்கொள்ளலாம்.

இன்றுடன் ஒருவருடங்கள் ஆன பின்பும், இது குறித்து முறையான தகவல்கள் வெளியாகாமல் இருப்பது பெருத்த சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்