சிறுமியை பெற்றோரிடம் விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்! 25பேரால் நடந்த கொடுமை

Report Print Abisha in இந்தியா
632Shares

சிறுமியை உறவினர்கள் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்ததில், கழிவறையில் மயங்கி விழுந்து நேற்று பலியாகியுள்ளார்.

சென்னை கே.கே. நகரை சேர்ந்த தம்பதியினர் அடுக்குமாடி குடியிருப்பில், சூப்பர்வைசர் மற்றும் வீட்டு வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 10 மற்றும் 5 வயதில் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளான்.

நேற்று இரவு இரண்டாவது மகள் கழிவறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வெளியில் வராததல் சந்தேகம் அடைந்த தாய் சென்று பார்த்தபோது, சிறுமி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவருக்கு, மகள் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த பொலிசார் தாயிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், “எனது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம். ஏற்கனவே உறவினர் ஒருவரை திருமணம் செய்து அவர் மூலம் எனக்கு இரண்டு மகள்கள் பிறந்தார்கள். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் எற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டு பாண்டிசேரியில் உள்ள துணிக்கடையில், வேலைக்கு சேர்ந்தேன்.

குழந்தைகள் இருவரும், என்னுடைய தாய் வீட்டில் இருந்தனர். நான் ஜவளிக்கடையில் வேலை பார்த்த போது அங்கு பணிக்கு வந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். அவர் மூலம் எனக்கு ஒரு மகன் உள்ளான்.

கடந்த ஆண்டு குழந்தைகளை பார்க்க ஊருக்கு சென்றேன். அப்போது 2018ஆண்டு முதல் உறவினர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வருவதாக இரண்டாவது மகள் என்னிடம் கூறி அழுதாள். மேலும், இது பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி வந்தததாகவும் கூறினாள்.

மனமுடைந்த நான் மகளையும் என்னுடன் பாண்டிச்சேரிக்கு அழைத்து வந்துவிட்டேன். பள்ளிக்கு சென்று வந்த இரண்டாவது மகள் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை கண்ட பள்ளி ஆசிரியை மகளிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறினார். அதிர்ச்சியடைந்த ஆசிரியை பள்ளி நிர்வாகம் மூலம் பாண்டிச்சேரி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு தெரிவித்தார்.

அதன் பேரில் விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் மகளை மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 16 பேர் மீது போஸ்க்சோ சட்டம் பாய்ந்தது.

கடந்த டிசம்பர் மாதம் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் உறவினர்கள் மூலம் எனக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் கணவர் குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தேன் என தெரிவித்தார்.

மேலும், சிறுமி பாலியல் ரீதியாகப் துன்புறுத்தப்பட்டதால் வயிற்று வலியில் துடித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் நேற்று இரவு கழிவறையில் மயங்கி விழுந்து இறந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்