நடிகை சபர்ணாவின் தற்கொலைக்கான காரணம் - 4ஆண்டுகளுக்கு பின் வெளியிட்ட தோழி!

Report Print Abisha in இந்தியா

முன்னாள் பிரபல சீரியல் நடிகையின் தற்கொலைக்கான காரணத்தை அவரது தோழி 4 ஆண்டுகளுக்கு பின் வெளியிட்டுள்ளார்.

நடிகை சபர்ணா 2016ஆம் ஆண்டு வீட்டில் நிர்வாண நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். முதலில், அவர் கொலை செய்யப்பட்டதாக பல தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் அது தற்கொலை என்று பொலிசார் தெரிவித்தனர்.

அவர், திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பொலிசார், அவரது தற்கொலைக்கான காரணங்கள் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சீரியல் நடிகை உஷா எலிசபெத் சபர்ணாவின் தற்கொலை குறித்து தற்போது பேசியுள்ளார். அதில் “சபர்ணாவுக்கு நடிப்பு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என தன்னிடம் கூறி வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இதனால் பல நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், ஆனால் பல முறை எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறியும் அவர் தற்கொலை முடிவை எடுத்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். இது நடிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரைக்கு அறிமுகமான சபர்ணா, சீரியர்களில் வில்லியாகவும், சில திரைப்படங்களில், தோழியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்